காரைக்குடி-மதுரை புதிய ரெயில் பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் மத்திய மந்திரியிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்




காரைக்குடி-மதுரை புதிய ரெயில் பாதை திட்டத்தை தொடங்க வேண்டும் என ரெயில்வே மந்திரியிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தினார்.

ரெயில்வே மேம்பாலம்

மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவிடம் சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி. தனது தொகுதிக்குட்பட்ட ெரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்குடியில் இருந்து புதுவயல், அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும். ராமேசுவரம்-அயோத்தியா எக்ஸ்பிரஸ் ெரயில் இரு மார்க்கங்களிலும் சிவகங்கையில் நின்று செல்ல வேண்டும். காரைக்குடி அருகே ஸ்ரீராம்நகரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்.

திருச்சி-காரைக்குடி ரெயிலை மீண்டும் மானாமதுரை வரை இயக்க வேண்டும். பெரோஸ்பூர்-ராமேசுவரம் ரெயிலை இரு மார்க்கத்திலும் காரைக்குடி ரெயில்வே சந்திப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம்-கோவை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும். ஜோத்பூர்-திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் ராமேசுவரம் வரை நீட்டிக்க வேண்டும். இரு மார்க்கத்திலும் சிவகங்கை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும்.

புதிய ரெயில் பாதை

எனது தொகுதி ெரயில் நிலையங்களை மதுரைக்கோட்டத்தில் இருந்து திருச்சி கோட்டத்திற்கு மாற்ற வேண்டும். ராமேசுவரத்தில் இருந்து பெங்களூருக்கு மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக புதிய ெரயில் இயக்க வேண்டும். திருவாரூரிலிருந்து காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு பகல் நேர பயணிகள் ெரயில் இயக்க வேண்டும்.

காரைக்குடியில் இருந்து திருப்பத்தூர்-மேலூர் வழியாக மதுரைக்கு புதிய ெரயில் பாதை, காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடிக்கு ரெயில் பாதை, காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர்-நத்தம் வழியாக திண்டுக்கல் புதிய ரெயில் பாதை திட்டங்களை விரைந்து தொடங்க வேண்டும். காரைக்குடி ரெயில் நிலையம் 3 பாதைகள் இணைக்கும் சந்திப்பாக உள்ளதால் இந்த ரெயில் நிலையத்தில் தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து வசதிகளும் நிறைந்திருப்பதால் ெரயில்வே தொழிற்கூடம் அமைத்து இப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி அடையவும், வேலை வாய்ப்பு பெருகவும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments