திருமயம் ஊராட்சி மன்ற தலைவருக்கு தேசிய விருது




தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் இருந்து 62 சிறந்த தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு சிறந்த தலைவர்களுக்கான தேசிய விருது புதுடெல்லியில் வழங்கப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்றத்தலைவர் சிக்கந்தருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டங்களை சிறப்பாக செல்படுத்தியதற்காக சிறந்த ஊராட்சி மன்ற தலைவருக்கான தேசிய விருது மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி எஸ்.பி.சிங் பாகேல் வழங்கினார். இதையடுத்து, விருது பெற காரணமாக இருந்த அனைத்து தரப்பினருக்கும் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தர் நன்றியை தெரிவித்துக்கொண்டார். மேலும் திருமயம் ஊராட்சி சிறப்பாக செயல்பட இந்த விருது உந்துதலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments