பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே ஆகஸ்ட் 15, 16, 17ம் தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏறவோ இறங்கவோ முடியாது. எனினும் தாம்பரத்திற்கு பதில் மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கி கொள்ளலாம். ஆனால் தாம்பத்திற்கு பதில் செங்கல்பட்டில் தான் ஏற முடியும்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள தண்டாவளங்களில் 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ள ஜல்லி கற்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில் புதிய ஜல்லி கற்களை கொட்டி, அதன் மீது சிலிப்பர் கற்களை வைத்து தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதேபோல் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்ற தண்டவாளங்களுக்கு செல்லும் வகையில் கூடுதல் 'கிராஸ் ஓவர்' வேலையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் கிராஸ் ஓவர் செய்து வந்தது. இந்த பணிகளுக்கு பிறகு 50 கிலோ மீட்டர் வேகத்தில் 'கிராஸ் ஓவர்' செய்ய முடியும் என்கிறாரகள் அதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்க விரைவு ரயில் நிறுத்தமான 8-வது மற்றும் 9-வது நடைமேடையை பயணிகளின் நலனுக்காக நீட்டிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.
தற்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்களுக்காக 4 நடைமேடைகளும், விரைவு ரயிலுக்காக 4 நடைமேடைகளும் உள்ளது. சென்னையின் மூன்றாம் ரயில் முனையும் அமைக்கும் பணிகளுக்காக தாம்பரத்தில் கூடுதலாக நடைமேடை 9 மற்றும் 10 ஆகிய புதிய 2 நடைமேடைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14-ம் தேதி வரையில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் 63 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதி நேரமாகவும், சில ரயில்கள் முழுவதுமாகவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் ராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் எந்த எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே ஆகஸ்ட் 15, 16, 17ம் தேதிகளில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏறவோ இறங்கவோ முடியாது என்று கூறியுள்ள ரயில்வே, தாம்பரத்திற்கு பதில் மாம்பலம் ரயில் நிலையத்தில் பயணிகள் இறங்கி கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. அதேநேரம் தாம்பரத்திற்கு டிக்கெட் எடுத்த பயணிகள் செங்கல்பட்டில் தான் ஏறிக் கொள்ள முடியும். அதன்பிறகு தான் எழும்பூரில் தான் ரயில் நிற்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், தாம்பரத்தில் நடந்து வரும் யார்டு புனரமைப்புப் பணிகள் கார9ணமாக , அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் போகும் போதும் சரி, வரும்போதும் சரி, 15.08.2024 (வியாழன்), 16.08.2024 (வெள்ளிக்கிழமை), 17.08.2024 (சனிக்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு தாம்பரத்தில் நிற்காது. அதேநேரம் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர் வழியாகச் செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாம்பரத்தில் நிற்காது என்றாலும், பயணிகளின் வசதிக்காக மாம்பலத்தில் கூடுதலாக நின்று செல்லும்.
இதேபோல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் மற்றும் சென்னை எழும்பூர் வழியாக செல்லும் அனைத்து டவுன் எக்ஸ்பிரஸ் ரயில்களும் ஆகஸ்ட் 15, 16, 17 ஆகிய தேதிகளில் 3 நாட்களுக்கு தாம்பரத்தில் நிற்காது என்றாலும் பயணிகளின் வசதிக்காக செங்கல்பட்டில் கூடுதலாக நின்று செல்லும்" இவ்வாறு கூறியுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.