ராமநாதபுரத்தில் ரூ.76 கோடியில் அரசு சட்டக்கல்லூரி கட்டிடம் காணொலி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்




ராமநாதபுரத்தில் ரூ.76 கோடியில் கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திறப்பு விழா

ராமநாதபுரத்தில் ரூ.76 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தை, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத்சிங் காலோன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தீஷ், நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் அரசு சட்டக்கல்லூரியில் குத்துவிளக்கேற்றி வைத்து மாணவர்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். அதனைத்தொடர்ந்து கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறியதாவது:-

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்ட குதக்கோட்டை கிராமத்தில் ரூ.76 கோடியில் புதிதாக கட்டப்பட்ட அரசு சட்டக் கல்லூரி கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இக்கல்லூரி 2 தளங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிர்வாகப்பிரிவு கட்டிடம், முதல்வர் அறை, 26 வகுப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. நவீன கலையரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.

விடுதி வசதி

மேலும் நூலகம், கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 84 அறைகளைக் கொண்ட பெண்கள் விடுதி கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, அலுவலர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு ஆகிய உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அரசு சட்டக் கல்லூரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலுள்ள மாணவ, மாணவிகள் சட்டக் கல்லூரியில் படித்து பயன்பெற ஏதுவாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் ஜேம்ஸ் ஜெயபால், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல்மாறன், பேராசிரியர்கள் ஜீவரத்தினம், விஜிபிரியா, முத்துக்குமார், யூனியன் தலைவர்கள் திருப்புல்லாணி புல்லாணி, ராமநாதபுரம் பிரபாகரன், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திர ராமவன்னி, ஆதித்தன், ஊராட்சி தலைவர் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments