மணமேல்குடி ஒன்றியத்தல் உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி - பயிற்சியாளர்கள் உடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தல் உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி - பயிற்சியாளர்கள் உடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆலோசனை கூட்டம் 
  
இக்கூட்டத்தினை மணமேல்குடி வட்டாரக் கல்வி அலுவலர் மதிப்புக்குரிய 
திரு, செழியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 வட்டார வளமையை மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் முன்னிலை வகித்தார். 

இந்நிகழ்வில் அனைத்து நடுநிலைப்பள்ளி உயர் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு எமிஸ் இணையத் தளத்தில் மாணவர்கள் சேர்க்கை, ஆதார் எண் பதிவேற்றம். மாணவர்களின் தற்போது உள்ள புகைப்படங்கள் மாற்றி அமைத்தல்,  அரசு நல உதவி திட்டங்களை எமிசில் அப்டேட் செய்வது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு உறுப்பினர்களை பதிவேற்றம் செய்தல், அலுவலகத்தில் இருந்து எமிஸ் தொடர்பான பணிகள் குறித்து தகவல் கூறும்போது உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும்  இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு தினமும் மாணவர்களின் வருகை பதிவு செய்ய வேண்டும் என்றும், கற்றல் கற்பித்தல் உபகரணங்களை பயன்படுத்துதல் மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனைகளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள்  திரு சசிகுமார்,  திரு பன்னீர்செல்வம் மற்றும் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும் இந்நிகழ்வில் ஹைடெக் லேப் நிர்வாகிகள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments