சுதந்திர தின விழாவையொட்டி 497 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நாளை நடக்கிறது




புதுக்கோட்டை மாவட்டத்தில் சுதந்திர தின விழா அன்று (வியாழக்கிழமை) 497 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை வாரியம், உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் இதரப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேற்கண்ட தகவலை கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments