எஸ்.பி.பட்டினம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து சாலையில் சிதறிய வெடிபொருட்களால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சாலையில் சிதறிய வெடிபொருள்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளி பகுதியில் நேற்று ஒருவர் மோட்டார்சைக்கிளில் சாக்கு மூடையுடன் சென்று கொண்டிருந்தார். அங்கு இருந்த வேகத்தடையில் வேகமாக மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த சாக்குமூடை தவறி சாலையில் விழுந்தது. இதில் மூடையில் இருந்த பொருட்கள் சாலையில் சிதறின. அவை வெடி பொருட்கள் போல இருந்ததால் வெடித்து விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அந்த வழியாக வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இதை பார்த்த மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபரும் அங்கிருந்து தப்பிஓடினார். அப்போது அவரது செல்போன் தவறி சாலையில் விழுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் ஓரியூர் கிராம நிர்வாக அலுவலர் யாகப்பனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் எஸ்.பி.பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஜெலட்டின் குச்சிகள்
விசாரணையில் சாலையில் சிதறி கிடந்தது ஜெலட்டின் குச்சிகள் என்பது தெரியவந்தது. 400 ஜெலட்டின் குச்சிகள், 400 டெட்டனேட்டர், 3½ கிலோ பீஸ் ஒயர் ஆகியவை இருந்தன. மேலும் மர்மநபர் தவறவிட்டுச் சென்ற செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி, மர்மநபரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.