தனுஷ்கோடி பகுதியில் காற்றின் வேகத்தில் காணாமல் போன ஊர் பெயர் பலகைகள் காட்சிப்பொருளாக இருக்கும் இரும்பு கம்பிகள்




காற்றின் வேகத்தால் தனுஷ்கோடி பகுதியில் ஊர் பெயர் எழுதப்பட்ட பலகைகள் சேதமடைந்து இரும்பு கம்பிகள் மட்டும் காட்சிப்பொருளாக உள்ளது.

ஊர் பெயர் பலகை

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தனுஷ்கோடி அரிச்சல் முனை சாலை வளைவு மற்றும் கடல் அழகையும் பார்த்து ரசிக்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர். இவ்வாறு தனுஷ்கோடி வரும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனுஷ்கோடி கோதண்டராமர் கோவில் சாலை, கம்பிப்பாடு, எம்.ஆர்.சத்திரம் உள்ளிட்ட சாலைகளில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல முக்கிய ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டு அதில் தனுஷ்கோடி பகுதியில் இருந்து அந்த ஊர்களின் தூர கிலோமீட்டரும் எழுதப்பட்ட தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.

தனுஷ்கோடி பகுதியில் அவ்வப்போது பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் கம்பிப்பாடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த எழுத்து தகவல் பலகை சேதமடைந்துள்ளது. ஊர்பெயர்கள் எழுதப்பட்ட இரும்பு தகடுகள் காற்றின் வேகத்தால் பறந்து கீழே விழுந்தும் வருகிறது. தற்போது ஒரே ஒரு பெயர் பலகை மட்டுமே உள்ளது.

காட்சிப்பொருளான கம்பி

அதுவும் எப்போது காற்றில் பறந்து கீழே விழும் என்ற நிலையில் உள்ளது. மேலும் பெயர் பலகை இல்லாததால் வெறும் இரும்பு கம்பி ஆர்ச் போன்று காட்சியளித்து வருகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் கம்பிப்பாடு பகுதியில் சேதம் அடைந்து இருக்கும் ஊர் பெயர் எழுதப்பட்ட பெயர் பலகை மற்றும் இரும்பு கம்பிகளை அகற்றி புதிதாக வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் கோதண்டராமர் கோவில், எம்.ஆர்.சத்திரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட ஊர் பெயர் தகவல் பலகைகளும் ஒன்று கூட இல்லாமல் முழுமையாக காற்றின் வேகத்தால் பெயர்ந்து சேதமடைந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டுமே காட்சி பொருளாக இருந்து வருகிறது. இந்த கம்பிகளும் வாகனங்கள் மீது விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன்பாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments