கட்டுமாவடி
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், மீமிசல் உள்பட அதன் சுற்றுவட்டார பகுதிகள் 30 கிலோ மீட்டருக்கு மேல் கடற்கரை பகுதியாகும். பாக்ஜலசந்தி பகுதியில் அமைந்துள்ள இந்த கடல் பகுதி அமைதியான பகுதியாகும். மற்ற கடல் பகுதிகளை போல் அலை அதிகமாக காணப்படுவதில்லை. ஆழ்கடல் இல்லா பகுதி என்று அழைக்கப்படும் இப்பகுதியில் கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். இங்கு பிடிக்கப்படும் மீன்களுக்கு தனி சுவை உள்ளதால் அசைவ பிரியர்கள் மத்தியில் கடும் வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் கட்டுமாவடி பகுதியில் நேற்று கடலில் நீர்மட்டம் சிறிதளவு உள்வாங்கியிருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தரையில் படகுகள்
கடல் உள்வாங்கியது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கட்டுமாவடி கடலில் சில நேரங்களில் தண்ணீர் உள் வாங்கிவிடுகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அதேநேரத்தில் இரவு நேரங்களில் தண்ணீர் மட்டம் உயர்ந்து விடுகிறது. அலையே இல்லாத இடத்தில் கடல் நீர்மட்டம் உள்வாங்குவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தற்போது கரையில் நிறுத்தப்படும் நாட்டுப்படகுகள் மண் தரையில் தட்டியபடி நிற்கிறது. கடல் நீர் உள்வாங்குவதால் படகுகளை நிறுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் படகுகளை மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லும் போது மீனவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.