புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய உலக அமைதி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
அறந்தாங்கி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் சொசைட்டி, மீமிசல் கிங்ஸ் ரோட்டரி, அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி, அறந்தாங்கி ஃபிரண்ட்ஸ் ரோட்டரி ஆகிய சங்கங்கள் இணைந்து உலக அமைதிக்கான விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
அறந்தாங்கி தொடக்க கல்வி மாவட்ட அலுவலர் சாந்தி தலைமையில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், துணை ஆளுநர் மருத்துவர் விஜய் மற்றும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ரெட்கிராஸ் அறந்தாங்கி செயலாளர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார்.
அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ஜெயந்தி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். நூற்றுக்கணக்கான ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி மாணவ, மாணவிகள் உலக அமைதிக்கான முழக்கமிட்டு, பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.
வெஸ்ட்லி பள்ளி வரை சென்று அங்கே மாணவ மாணவியர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
மீமிசல் ரோட்டரி பட்டய தலைவர் வீரத்துரை, அமரடக்கி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் யோகேந்திரன், மீமிசல் கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் முனைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் ரஜினிகாந்த், பொருளாளர் கார்த்திக், அறந்தாங்கி தி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அப்துல் பாரி, செயலாளர் ஆட்டோ பிரவீன், பொருளாளர் முனைவர் முபாரக் அலி, அறந்தாங்கி ஃபிரண்ட்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கட் குமார், செயலாளர் சாத்தையா, பொருளாளர் செல்வம் ஆகியோர் பேரணியை ஒருங்கிணைத்து செயல்பட்டார்கள்.
மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, வெஸ்ட்லி பள்ளி தாளாளர் ஹரிஹரன், அறந்தாங்கி இணை ஒருங்கிணைப்பாளர் நாகூர்கனி, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஷோபா, பாஸ்கரன், கவிதா, பாஸ்கர், பழனிமுத்து, சாத்தப்பன் உள்ளிட்ட அனைத்து வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இறுதியில் மணிமேல்குடி வட்டார ஜூனியர் ரெட்கிராஸ் சொசைட்டி ஒருங்கிணைப்பாளர் முத்துதுரை அனைவருக்கும் நன்றி கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.