புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை சார்பில் 5-ம் ஆண்டாக, மாபெரும் இரத்ததான முகாம் இன்று 25.08.24 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிருஷ்ணாஜிப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததானம் முகாம் கிருஷ்ணாஜிப்பட்டினம் தவ்ஹீத் மர்கஸில் நடைபெற்றது.
இதற்கு மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக் அப்துல்லாஹ், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் சபியுல்லா, கிளைச் செயலாளர் சைபுல் கரீம், பொருளாளர் சல்மான் கான், துணைத் தலைவர் நஜ்முதீன், துணைச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், கிளை மருத்துவர் அணிச் செயலாளர் அஃப்சல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மணமேல்குடி காவல் ஆய்வாளர் ஜெயமோகன் கலந்து கொண்டார்.
இந்த முகாமின் துவக்க உரையாக மாவட்ட தலைவர் சித்திக் ரகுமான் , “ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்” என்ற குர்ஆனின் போதனையின் அடிப்படையிலும், இஸ்லாம் என்பது பிறர் நலன் நாடக்கூடியது என்ற நபிகள் நாயகம் நற்போதனைகள் அடிப்படையிலும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று பேசினார்.
இந்த முகாமில் ஆர்வத்துடன் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
மருத்துவ தகுதி அடிப்படையில், 41 யூனிட்கள் இரத்தம் கொடையாக பெறப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.இரத்தம் வழங்கிய அனைவருக்கும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை மருத்துவர் இராதாகிருஷ்ணன் சான்றிதழ்களை வழங்கினார்.
இறுதியாக மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் சபியுல்லா நன்றியுறை நிகழ்த்தினார்.
இம்முகாமில் பங்களிப்பு செய்த இரத்த வங்கி மேலாளர் மற்றும் அவரது குழுவிற்கும், மேலும் இரத்தம் கொடையளித்த, கலந்து கொண்ட பொதுமக்கள், இதற்கான ஏற்பாடுகளை செய்த கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.