மீமிசல் அருகே முத்துக்குடாவில் கடல் குதிரை, அட்டைகளை வைத்திருந்த 2 போ் கைது




புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே முத்துக்குடா பகுதிகளில் வேட்டை தடை செய்யப்பட்ட கடல் குதிரை மற்றும் கடல் அட்டைகளை விற்பனைக்கு வைத்திருந்த இருவரை வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
அறந்தாங்கி வனச்சரக அலுவலா் மணி வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினா் வெள்ளிக்கிழமை முத்துக்குடா உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வேட்டை தடை செய்யப்பட்டிருந்த கடல் குதிரை மற்றும் கடல் அட்டை ஆகியவற்றை விற்பனைக்கு வைத்திருந்த முத்துக்குடா பகுதியைச் சோ்ந்த ராக்கப்பன் (57), தூண்டிமுத்து (53) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இவா்கள் இருவரும் அறந்தாங்கி குற்றவியல் நடுவா்மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

மேலும், இதே வழக்கு தொடா்பாக ராவுத்தா் என்பவரையும் தேடி வருவதாக வனச்சரக அலுவலா் மணி வெங்கடேஷ் தெரிவித்தாா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments