ராமநாதபுரம்-கீழக்கரை சாலையில் ரூ.25½ கோடியில் புதிய பாலம் அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்




ராமநாதபரத்திலிருந்து கீழக்கரை செல்லும் சாலையில் ரூ.25½ கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
ரூ.25½கோடியில் பாலம்

ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு விழா கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்–தார்.

அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை செல்லும் சாலையில் ரயில் பாதையை கடக்கும் வகையில் ரூ.25.60 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட அரசு உத்தரவிட்டு, அதன்படி 720 மீட்டர் தூரம் பாலம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1 லட்சம் பேர் பயன்படுத்துவார்கள்

இதனால் ரெயில் தண்டவாளத்தில் நாள் ஒன்றுக்கு 30 முறை கேட்டுகள் மூடப்படுவதால் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை இருந்து வந்தது. தற்போது இந்த நிலை தவிர்க்கப்படும். மேலும் பயண நேரம் குறிப்பிட்டபடி செல்வதற்கு இந்த பாலம் வாகன ஓட்டிடகளுக்ளுக்கும், பொதுமக்களுக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ராமநாதபுரம், கீழக்கரை, பசும்பொன்நகர், சக்கரக்கோட்டை, ஆர்.எஸ்.மடை, திருப்புல்லாணி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு இச்சாலை பயனுள்ளதாக இருப்பதுடன் நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த மேம்பாலத்தை பயன்படுத்துவார்கள். மேலும் உச்சிப்புள்ளி பகுதியிலும் இதேபோல் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் பாலம் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன், தேசிய நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்கள் கேசவன், முருகன், உதவி கோட்ட பொறியாளர்கள் வெற்றிவேல் ராஜன், கண்ணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வேலுச்சாமி, ராமநாதபுரம் நகர் மன்றத் தலைவர் கார்மேகம், ராமநாதபுரம் யூனியன் தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், ராமேசுவரம் நகர்மன்ற தலைவர் நாசர்கான், மண்டபம் ஒன்றிய செயலாளர் பிரவீன், தொண்டரணி அமைப்பாளர் ராஜா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அப்பாஸ் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments