கப்பல் போக்குவரத்து தொண்டியையும் இணைக்க கோரிக்கை




ராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு சுற்றுலா வரும் பயணிகளை மகிழ்விக்க ராமேஸ்வரம் பாம்பன். தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கப்பல் போக்குவரத்து ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த இடங்களுடன் தொண்டியையும் இணைக்க தமிழக அரசு உரிய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ராமேஸ்வரம், பாம்பன். தேவிப்பட்டினம் ஆகிய சுற்றுலா இடங்களை கடல் வழியாக கடல்வாழ் பவளப்பாறைகள், அரிய வகை கடல் மீன்களை கண்டு ரசிக்கும் வகையில் மூன்று மணிநேர கப்பல் போக்குவரத்து சேவை இயக்க

தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கப்பல் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் கப்பலை இயக்க விரும்பும் இதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த சுற்றுலா பயணிகள் கப்பலை இயக்க விரும்பும் அக்டோபர் 7ம் விண்ணப்பங்களை வேண்டும் என அறியுறுத்தப்பட்டு உள்ளது.

இதில் வரலாற்று சிறப்புமிக்க மிகவும் பழமை வாய்ந்த துறைமுகம் நகரான தொண்டி இணைக்கப்படவில்லை. தொண்டி அருகே உள்ள காரங்காடு பகுதியில் மாங் ரோவ் காடுகள் அதிகம் உள்ள பகுதிகள் உள்ளது. இதுவும்
ஒரு சுற்றுலா தலம் என்பது குறிப்பிடதக்கது. இங்கு படகு சவாரி உள்ளது. தொண்டியை இத்திட்டத்தின் கீழ் இணைப்பதன் மூலம் காரங்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா கூறியது. ராமநாதபுரம் மாவட்டத்திற்க்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் அதிகரிக்க செய்யும் வகையில் தற்போது தமிழக அரசு கப்பல் போக்குவரத்து மூலம் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்க்க தக்கது. ராமேஸ்வரம், பாம்பன், தேவிபட்டினத்துடன் தொண்டியையும் இணைத்தால் மேலும் சிறப்பாக இருக்கும். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments