கோபாலப்பட்டிணத்தில் தமுமுக மமக புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்




கோபாலப்பட்டிணத்தில் தமுமுக மமக புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளை நிர்வாகம் தேர்ந்தெடுப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் கத்தார் மண்டல துனைச் செயலாளர் அபூபக்கர் சித்திக் அவர்கள் இல்லத்தில்  31/8/2024 மாலை அஸர் தொழுகைக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டம் தமுமுக மாவட்ட துணைத் தலைவர்.MSK சாலிகு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ் கான் கத்தர் மண்டல துணைச் செயலாளர் அபூபக்கர் சித்திக், மணமேல்குடி ஒன்றிய தலைவர் காஜா மைதீன், ஆவுடையார்கோவில் ஒன்றிய தலைவர் அபுதாஹிர்,MVS மாவட்டச் செயலாளர் அப்துல் சுக்கூர், மாவட்ட உலமாஅணி பொருளாளர் ஜகுபர் சாதிக், மாவட்ட இளைஞரணி செயலாளர் முஹம்மது அபுசின் மற்றும் தமுமுக முன்னாள் நிர்வாகிகள், சாகுல் ஹமீது மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தகவல் வெளியீடு 
தமுமுக. ம.ம.க. புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments