மீனவர்கள் வலையில் சிக்கும் கடல் ஆமைகளை பாதுகாப்பாக விடுவித்தால் ரொக்கப்பரிசு வழங்கப்படுவதோடு, சேதமடையும் வலைகளுக்கு இழப்பீடு வழங்கப்படுகிறது.
அரிய வகை உயிரினங்கள்
கடல் வாழ் உயிரினங்களில் கடல் பசு, கடல் ஆமை, கடல் அட்டை உள்ளிட்டவை அரிய வகையாக காணப்படுகிறது. இந்தியாவில் பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை அமைந்துள்ளது. இப்பகுதிகளில் கடல் பசு, கடல் ஆமை, கடல் அட்டை அதிகளவில் காணப்படுகிறது. அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் அரிய வகை உயிரினங்களை பாதுகாக்க விழிப்புணர்வுகளும் மீனவர்களுக்கும், மீனவ கிராம மக்களுக்கும் ஏற்படுத்தப்படுகிறது.
அரிய வகை உயிரினங்கள் வலையில் சிக்கினால், அதனை பாதுகாப்பாக கடலில் விடவும் வனத்துறை, மீன்வளத்துறையினரால் அறிவுறுத்தப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லும் போது மீன்களை மட்டுமே பிடித்து வருவது உண்டு. சில நேரங்களில் கடல் பசு, கடல் ஆமைகள் வலைகளில் சிக்குவது உண்டு. இதனை மீனவர்கள் பாதுகாப்பாக கடலில் விட்டுவிடுவார்கள்.
23 கடல் ஆமைகள் மீட்பு
கடலில் மீன்பிடிக்க சென்ற இடத்தில் கடல் பசு, கடல் ஆமைகள் உள்ளிட்ட உயிரினங்களை பாதுகாப்பாக கடலில் விடுவதின் மூலம், அந்த மீனவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. மேலும் அந்த உயிரினங்களால் வலைகள் சேதமடைந்திருந்தால் அதற்கு நிவாரணமும் வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்த நிலையில் சமீபத்தில் கடல் பசு ஒன்றை மீனவர் ஒருவர் பாதுகாப்பாக விட்டிருந்தார். இதேபோல் அவ்வப்போது கடல் பசு மீட்கப்பட்டு விடுவிக்கப்பட்டதும் உண்டு.
இந்த நிலையில் கடல் ஆமைகள் சிக்குவதும் அதிகமாகி வருகிறது. கடந்த ஆண்டில் (2023) ஜனவரி முதல் அக்டோபர் மாதம் வரையில் 23 கடல் ஆமைகள் சிக்கி, அவை பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளன. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 23 மீனவர்களுக்கு ரூ.58 ஆயிரம் பரிசு வனத்துறையினரால் வழங்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வலைகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் கடல் ஆமைகள் வலையில் சிக்கினாலும், அதனை பாதுகாப்பாக கடலில் விட மீனவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.