தொண்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை நவாஸ்கனி எம்.பி.யிடம் கோரிக்கை




தொண்டி மக்கள் நல வளர்ச்சி சங்கம் சார்பில் அதன் தலைவர் சுலைமான் தலைமையில் நிர்வாகிகள் நவாஸ்கனி எம்.பி.யை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- தொண்டியில் 15 ஆண்டு காலமாக அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க வேண்டும் என தொண்டி மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்து வருகிறோம். 2009-ம் ஆண்டு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தொண்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக தொடங்கப்பட்டது. பணிமனைக்கான இடத்தை தேர்வு செய்வதில் காலதாமதம் ஏற்பட்ட நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் தற்காலிக பணிமனை மூடப்பட்டது. இதுகுறித்து முதல்-அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்தோம். அதன் அடிப்படையில் தொண்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க தொண்டி அருகே வேலங்குடி கிராம பகுதியில் இடத்தை அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தனர். ஆனால் இதுவரை பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராமநாதபுரம் தொகுதி நவாஸ்கனி எம்.பி. முயற்சியால் தொண்டியில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்க கலெக்டருடன் பேசி இடத்தை தேர்வு செய்து வழங்குவதுடன், பணிமனை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments