கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் வெளுத்து வாங்கிய மழை



 

கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் மழை வெளுத்து வாங்கியது 

தமிழகத்தில் இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் ஒருசில இடங்கள் மற்றும் காரைக்காலில் வரும் 7 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழையானது பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களில் 30 முதல் 40 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையானது அதிகபட்சமாக 35- 36 டிகிரி இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.30 மணியளவில் இருந்து கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து   பலத்த மழை பெய்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.

பலத்த மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments