மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் மீன் வலைகளுக்கு பாதுகாப்பு கூடம் அமைக்க மீனவர்கள் கோரிக்கை




மணமேல்குடி கோடியக்கரையிலிருந்து நாட்டுப்படகு மூலம் மீனவர்கள் கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இவர்கள் தினசரி காலை மற்றும் இரவு நேரங்களில் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இவர்கள் குறிப்பிட்ட தூரம் கடலில் சென்று மீன்கள் மற்றும் இறால், நண்டுகளை பிடித்து வருகின்றனர். இவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் வலைகளில் நண்டு, கனவா வலை, செங்கனி வலை உள்ளிட்ட பலவிதமான வலைகள் உள்ளன. ஒரு நாட்டுப்படகுக்கு சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை மதிப்புள்ள வலைகள் பயன்படுத்தப்படுகிறது. இவர்கள் கடலுக்கு சென்று திரும்பியவுடன் வலையிலிருந்து மீன்களையும், சில கழிவுகளையும் அகற்றி வலையை சரியான முறையில் பிரித்து எடுத்து வைப்பார்கள். இதில் மணமேல்குடி கோடியக்கரையில் மீன்பிடி வலைகளுக்கு பாதுகாப்பு கூடம் இல்லாததால் மீனவர்கள் பல லட்சம் மதிப்புள்ள வலைகளை கடற்கரை பகுதியில் உள்ள மரங்களில் கம்புகளை கட்டி தொங்கவிட்டுள்ளனர். இதனால் மழை மற்றும் வெயிலால் வலைகள் வீணாகிறது. எனவே அரசு மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் மீன் வலைகளுக்கு பாதுகாப்பு கூடம் அமைத்துதர வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments