பயணிகள் கப்பல்
நாகையில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14-ந்தேதி பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்துக்கு இருநாட்டு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக வடகிழக்கு பருவ மழையை காரணம் காட்டி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதியுடன் பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தொடங்கிய சில நாட்களில் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது பயணிகள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
சிவகங்கை கப்பல்
இந்த நிலையில் நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை மீண்டும் கடந்த மாதம் 16-ந் தேதி தொடங்கியது. "சிவகங்கை" என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு முதல் நாள் 44 பேர் பயணித்தனர். ஆனால் அடுத்தடுத்து வந்த நாட்களில் படிப்படியாக பயணிகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது.
பயணிகள் எண்ணிக்கை உயர்வு
இதன் காரணமாக நாகை, இலங்கை இடையே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே சேவை இருக்கும் என கப்பல் நிறுவனம் அறிவித்தது. போதுமான பயணிகள் வருகை இல்லாத காரணத்தால் செவ்வாய், வியாழன், ஞாயிறு என 3 நாட்கள் மட்டுமே இருநாட்டுக்கு இடையே கப்பல் சேவை செயல்பட்டு வருகிறது. 3 நாட்களாக குறைக்கப்பட்ட நிலையில் தற்போது பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன்தினம் இலங்கைைய சேர்ந்தவர்கள் 27 பேர், மலேசியாவை சேர்ந்த ஒருவர், இந்தியர்கள் 41 பேர் உள்பட 69 பயணிகள் முன்பதிவு செய்து இலங்கைக்கு பயணித்தனர்.
வேளாங்கண்ணி திருவிழா
வேளாங்கண்ணி திருவிழாவையொட்டி இலங்கையில் இருந்து நாகைக்கு வந்த பக்தர்கள் அதிக அளவில் கப்பலில் பயணிக்க தொடங்கி உள்ளனர். வேளாங்கண்ணி திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் வெளியூர், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு இலங்கையில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் மீண்டும் நாகையில் இருந்து கப்பலில் பயணிக்க விரும்பி சிவகங்கை கப்பலை நாடி உள்ளனர். இதேபோல இலங்கையில் இருந்து வேளாங்கண்ணி திருவிழாவுக்கு ஏராளமானோர் பயணிகள் கப்பலில் பயணிப்பார்கள் என்றும், இதனால் பயணிகளின் வரத்து வரும் தினங்களில் அதிகரிக்கும் என்றும் அந்த கப்பல் நிறுவனம் எதிர்பார்த்து உள்ளது.
நம்பிக்கை
150 பேர் செல்லக்கூடிய பயணிகள் கப்பலில் 69 பேர் வரையிலும் பயணித்ததையடுத்து பயணிகள் எண்ணிக்கை உயரத்தொடங்கி உள்ளதால் நாகை-இலங்கை இடையேயான கப்பல் சேவை தடைபடாமல் இயங்கும் என்ற நம்பிக்கை பயணிகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.
அதேபோல இந்த நிலை நீடித்து விரைவில் சரக்கு கப்பல் சேவையையும் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.