அதிராம்பட்டினத்தில் திருட்டுப்போன செல்போனை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்




அதிராம்பட்டினம் அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் நாடிமுத்து (வயது55). இவர் அதிராம்பட்டினம் சேதுரோட்டில் தனியார் பால் நிறுவனத்தின் முகவராக கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரது கடைக்கு வந்த வாலிபர் ஒருவர், பால் வாங்குவதைபோல் நடித்து கடையிலிருந்த ஸ்மார்ட் போனை திருடி சென்றுவிட்டார். ஸ்மார்ட் போன் காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்த நாடிமுத்து, அதிராம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திருவையாறில் அந்த ஸ்மார்ட் போனின் சிக்னல் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் போனை வைத்திருந்த நபரை கண்டுபிடித்து போனை மீட்டனர். இதைத்தொடர்ந்து நாடிமுத்துவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து அவரிடம் மீட்கப்பட்ட ஸ்மார்ட் போனை இன்ஸ்பெக்டர் முருகேசன் ஒப்படைத்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், போலீஸ்காரர் பிலால் முகம்மது ஆகியோர் இருந்தனர். கடந்த 3 மாதத்தில் மட்டும் தொலைந்துபோன சுமார் ரூ.3லட்சம் மதிப்பிலான 17 ஸ்மார்ட் போன்களை அதிராம்பட்டினம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments