பாம்பன் புதிய ரெயில் பாலம் அக்டோபர் 15-ந்தேதி திறப்பு?




பாம்பன் புதிய ரெயில் பாலம் அக்டோபர் 15-ந் தேதி திறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

பாம்பன் புதிய ரெயில் பாலம்

ராமநாதபுரம் மாவட்டத்துடன் ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலின் நடுவேஅமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வந்தது. 105 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகி விட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே ரூ.545 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றது.

தற்போது புதிய ரெயில் பாலத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும் சுமார் 700 டன் எடையும் கொண்ட தூக்குப்பாலம் பொருத்தப்பட்டுள்ளது.

தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்கான ஆயத்த பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அக்டோபர் 15-ந் தேதி

இது குறித்து ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாம்பன் புதிய ரெயில் பால பணிகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் முடிந்து தொடர்ந்து தூக்குப்பாலத்தை திறந்து மூடுவதற்கான சோதனை நடைபெறும்.

பின்னர் 21 பெட்டிகளுடன் ரெயில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்படும். அக்டோபர் மாதம் 15-ந் தேதி அன்று புதிய ரெயில் பாலத்தை திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

புதிய ரெயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்” என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments