கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை




புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துகண்ணு தலைமையில் போலீசார் சார்பில் 2 நாட்கள் சாகர் கவாச் என்கிற பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தால் அவர்களை எவ்வாறு தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மும்பாலை, ஆதிபட்டினம், கோட்டைப்பட்டினம், ஏம்பல், அரசங்கரை ஆகிய பகுதிகளில் சோதனைச்சாவடி அமைத்து அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வாகனத்தின் பதிவு எண்ணை சரிபார்த்த பின்னரே வாகனம் செல்ல அனுமதித்தனர். மேலும் கடலோர காவல் குழுமத்தினர் தங்கள் ரோந்து படகின் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித்து வரும் படகுகளை சோதனை செய்தனர். படகுகளுக்கு பதிவு எண் உள்ளதா?, மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என சரிபார்த்த பின்னரே படகுகள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மேலும் கடலில் சந்தேகம் படும்படி யாரேனும் தென்பட்டால் உடனே போலீசாருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த ஒத்திகையில் போலீசாருடன், கடலோர பாதுகாப்பு குழும போலீசார், கடலோர காவல் படையினர், தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments