ஆன்லைனில் டாஸ்க்கை முடித்தால் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி பேராவூரணியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.27¾ லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை




ஆன்லைனில் டாஸ்க்குகளை முடித்தால் அதிக லாபம் பார்க்கலாம் எனக்கூறி பேராவூரணியை சேர்ந்த இளம்பெண்ணிடம் ரூ.27¾ லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண்

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் செல்போன் எண்ணிற்கு டெலிகிராம், வாட்ஸ் ஆப் செயலிகளில் கடந்த ஆகஸ்டு மாதம் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் உணவகங்களுக்கு மதிப்பீடு செய்து இணையத்தில் வெளியிடுவது போன்ற பல டாஸ்க்குகளை நிறைவேற்றினால் அதிக வருமானம் கிடைக்கும். இதற்கு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும்.

டாஸ்க்குகளை முடித்தால் லாபம் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது. மேலும் செல்போன் எண்ணும் கொடுக்கப்பட்டு இருந்தது. இதை நம்பிய அப்பெண் அந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். அப்போது எதிர் முனையில் பேசிய மர்ம நபர் கூறிய வங்கிக்கணக்குக்கு பல்வேறு தவணைகளில் ரூ.27¾ லட்சம் செலுத்தி உள்ளார்.

ரூ.27¾ லட்சம் மோசடி

இவ்வளவு தொகை செலுத்திய பின்னரும் எவ்வித லாபத்தொகையும் அந்த பெண்ணிற்கு கிடைக்கவில்லை. இதனால் அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

இதையடுத்து அந்த பெண் தன்னிடம் ரூ.27¾ லட்சம் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்தார். இதுகுறித்து தஞ்சாவூர் சைபர் கிரைம் போலீசில் அந்த பெண் புகார் செய்தார். இதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments