பட்டுக்கோட்டையில் ரெயில்வே கேட் பாதையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று உதவி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு
பட்டுக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் ரெயில்வே கேட் பாதை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்தது. கடந்த 2012-ம் ஆண்டு காரைக்குடி-மயிலாடுதுறை அகல ரெயில் பாதை பணிகளுக்காக அந்த பாதை மூடப்பட்டது. இதனால் அண்ணா நகர் உள்ளிட்ட 24,25,26-வது வார்டு பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர். அந்த பகுதி மக்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக ரெயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைப்பதற்கு ரூ.2 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்தது. ஆனால் இதுவரை சுரங்கப்பாதை அமைப்பதற்காக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
உதவி கலெக்டரிடம் மனு
இந்தநிலையில் நேற்று பட்டுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த 24,25,26 ஆகிய 3 வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் சாலையிலிருந்து 24-வது வார்டு கவுன்சிலர் பிரபாகனி தலைமையில் ஊர்வலமாக சென்று பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் ஜெயஸ்ரீயிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில், விரைவில் ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை
அப்போது முன்னாள் நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார், நகர த.மா.கா. தலைவர் குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர். மனுவை பெற்று கொண்ட உதவி கலெக்டர் ஜெயஸ்ரீ கோரிக்கைகள் குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.