அறந்தாங்கி அருகே மட்டை மில்லில் தீவிபத்து




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ராஜேந்திரபுரத்தில் உள்ள ரபீக் என்பவருக்கு சொந்தமான மட்டை மில்லில்  தீவிபத்து.அந்த மில்லில் இருந்தால் இயந்திரங்கள் ட்ராக்டர் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசம் .

இரண்டு  தீ அனைப்பு வாகனம் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ராஜேந்திரபுரம் பகுதியில் ரபீக் என்பவருக்கு சொந்தமான மட்டை மில் உள்ளது இந்த மட்டை மில்லில் இன்று பணியாளர்கள் வேலைப் பார்த்து கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக டிராக்டரில் இருந்து  தீ பரவியதாக கூறப்படுகிறது

உடனே சுதாரித்து கொண்ட  தென்னை மட்டை மில்லில் பணியில் இருந்த பணியாளர்கள் அங்கு இருந்து வெளியேறி உடனே தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவம் அறிந்த  அறந்தாங்கி தீயணைப்பு துறையினர் விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர்  ஆனால் அருகில் இருந்த தேங்காய் மட்டையில்  தீ பரவியதால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அறந்தாங்கி தீயணைப்புத் துறையினர் திணறி  வருகின்றனர்

 கூடுதலாக கீரமங்கலம்  தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தற்போது தீயை அணைத்து வருகின்றனர்


இந்த பகுதி முழுவதும் கரும் புகைகள் சூழ்ந்து காணப்படுவதால்  இப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments