கலந்துரையாடல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ‘காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திருக்கோகர்ணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் அருணா கலந்துரையாடினார்.
புதுக்கோட்டை கலெக்டராக அருணா பொறுப்பேற்ற பின் இந்தநிகழ்ச்சியில் முதன்முதலாக மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். மேலும் அரசின் திட்டங்கள் குறித்தும், தான் படித்து, இந்த பதவிக்கு வந்த நிலை குறித்தும் தெரிவித்தார்.
தன்னம்பிக்கை அவசியம்
தொடர்ந்து கலெக்டர் அருணா கூறுகையில், ‘‘மாணவ-மாணவிகள் எதிர்கால இலக்கை முடிவு செய்துகொள்ள வேண்டும். எத்தனை இடையூறுகள் வந்தாலும் அதில் இருந்து தடம் மாறக்கூடாது. முடிவெடுப்பதில் பெண்கள் தீர்க்கமானவர்கள். ஆண்கள் கூட சற்று தடுமாறலாம். அதனால் மாணவ-மாணவிகள் தங்களது இலக்கை அடைய தன்னம்பிக்கை அவசியம். தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் வெற்றி அடையலாம். எனது ரோல் மாடல் என் தந்தை தான்.பெண்கள் தங்களது பணியில் நிர்வாக திறமையை வெளிப்படுத்தும் போது தான் அங்கீகரிக்கப்படுவார்கள். கலெக்டர் பதவி என்பது ஆண், பெண்களுக்கு பொதுவானது தான். இதில் நிர்வாக திறமை அவசியம்'' என்றார்.
பரதநாட்டியம்
கலந்துரையாடலின் போது மாணவ-மாணவிகள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தி பாட்டுப்பாடியும், பரதநாட்டியம் ஆடியும், சொற்பொழிவாற்றியும் அசத்தினர். நிகழ்ச்சியில், முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட சமூகநல அலுவலர் கோகுலப்பிரியா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சாலை செந்தில், மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.