ECR சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் SDPI கட்சி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் (14.09.2024) கிருஷ்ணாஜிப்பட்டிணம் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தை மாவட்ட பொதுச்செயலாளர் S.A.M.அரபாத் அவர்கள் வரவேற்புரையாற்றி தொடங்கி வைத்தார், மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். மேலும் கூட்டத்தில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. நவம்பர் 16 சென்னையில் இரண்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சியின் சார்பில் நடைபெற உள்ள பேரணியில் நமது மாவட்டம் சார்பில் அதிகமான மக்களோடு கலந்து கொள்வது என்றும்
2. SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கையான ECR சாலை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மாவட்ட பொருளாளர் M.முகமது அஜீஸ் அவர்கள் நன்றியுரை ஆற்றி கூட்டத்தை நிறைவு செய்தார்.
வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.