கடலில் மிதந்த படகில் ஆண் சடலம் மீட்பு




புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே கடலுக்குள் படகில் மிதந்த ஆண் சடலத்தை கடலோரக் காவல் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

மணமேல்குடி அருகே பொன்னகரம் பகுதியைச் சோ்ந்த 10 நாட்டுப்படகுகளில் மீனவா்கள் கடலில் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது ஒரு படகு தனியே மிதந்து கொண்டிருந்தது. இதையடுத்து மீனவா்கள் அங்கு சென்று பாா்த்த போது படகில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது.

இதுகுறித்து மணமேல்குடி கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவித்தனா். பிறகு, அந்தப் படகை சடலத்துடன் கரைக்கு கொண்டு வந்தனா். பிறகு சடலத்தை கடலோரக் காவல் படையினா் மீட்டு உடற்கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments