அதிராம்பட்டினத்தில் ரூ.1 கோடியில் பஸ் நிலையம் மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா




அதிராம்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள பஸ் நிலையத்தில் மழைக்காலங்களில் மழைநீர் சூழ்ந்து பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பஸ் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து அமைச்சர் நேரு பரிந்துரையில் பேரில் பஸ் நிலையம் மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.1 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பஸ் நிலையத்தில் தரை மட்டத்தை உயர்த்துதல், சைக்கில் ஸ்டாண்ட் மற்றும் நான்கு கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் நகர்மன்ற தலைவர் தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம், துணைத் தலைவர் ராமகுணசேகரன், நகராட்சி ஆணையர் சித்ரா சோனியா, நகர செயற்குழு உறுப்பினர் அப்துல்ஹலீம், நகர்மன்ற உறுப்பினர்கள் மைதீன், அகமது மன்சூர், மற்றும் உறுப்பினர்கள், தி.மு.க.வினர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments