பட்டுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் ரூ.1½ கோடியில் புதிய வணிக வளாகம் கட்ட பூமி பூஜை நகர்மன்ற தலைவர் பங்கேற்பு




பட்டுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 47 லட்சம் செலவில் 25 கடைகளுடன் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. புதிய வணிக வளாகம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா கலந்து கொண்டு முதல் செங்கல்லை எடுத்து வைத்து பணியை தொடங்கி வைத்தார். இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் பிரபாகனி, சரவணகுமார், குமணன், ஜெயராமன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் உதயகுமார், தூய்மைப் பணி ஆய்வாளர் மகாமுனி மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments