உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளியில் கலெக்டர் அருணா ஆய்வு




மணமேல்குடி ஒன்றியத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் அருணா ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக அவரை மணமேல்குடி ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயன் வரவேற்றார். கட்டுமாவடியில் உள்ள அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்புகள் மற்றும் பதிவேடுகள் குறித்து மருத்துவரிடம் கலெக்டர் கேட்டறிந்தார். தொடர்ந்து கட்டுமாவடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மணமேல்குடி அரசு மாணவியர் விடுதி, வேளாண்மை விரிவாக்க மையம், கோட்டைப்பட்டினத்தை அடுத்த கொடிக்குளம் துணை மின்நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். இதையடுத்து மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கூட்டரங்கில் அனைத்து துறை உயர் அதிகாரியுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வின்போது அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவகுமார், தனித்துணை கலெக்டர் ஷோபா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசமணி, சீனிவாசன் வட்டாட்சியர் ஷேக் அப்துல்லா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.









எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments