புதுக்கோட்டையில் ரெயில்வே கேட் மீது சரக்கு வேன் மோதல்




புதுக்கோட்டை அருகே கருவேப்பிலான் ரெயில்வே கேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு சரக்கு வேன் ஒன்று மோதியது. இதனால் ரெயில்வே கேட்டை மூடுவதில் சிரமம் ஏற்பட்டது. திருச்சி-காரைக்குடி மார்க்கமாக இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்கள் அனைத்தும் மெதுவாக இயக்கப்பட்டன. மேலும் கேட்டை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். ரெயில்வே கேட்டில் சேதத்தை ஏற்படுத்திய சரக்கு வேன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments