நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 23 ம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு






நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் 23 ம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு

நாடு முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் சேவை இணையதளம் செப். 20 ஆம் தேதி இரவு 8 மணி முதல் 23 ஆம் காலை 6 மணி வரை செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக நாடு முழுவதும் 3 நாட்களுக்கு பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிக்கை;  செப்.20ம் தேதி இரவு 8 மணி முதல் 23ம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் செயல்படாது என மதுரை பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் அறிவித்துள்ளார்

இது குறித்து வெளியான அறிவிப்பில்:-

இந்தியா முழுவதும் தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக 20.09.2024 (வெள்ளிகிழமை)இரவு 20.00 மணி முதல் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 06.00 வரை, பாஸ்போர்ட் சேவை இணையதளம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். எனவே செயல்படாது பாஸ்போரட் விண்ணப்பதாரர்கள் அனைத்துவிதமான சேவைகளுக்கும் (பாஸ்போரட் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் மற்ற சந்தேகங்களுக்கும்) தொழில்நுட்ப பராமரிப்பு முடிந்த பின்பு பாஸ்போர்ட் சேவை இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மேலும் விவரங்களுக்கு மண்டல பாஸ்போர்ட் அலுவலக தொலைப்பேசி 0452-2521205 மற்றும் 0452-2521204 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம். 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments