வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்




புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கி ேபசுகையில், கிராமப்புறங்களில் குடிநீர் வசதி, மின் வசதி, சாலை வசதி, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியங்களில், வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான, மருத்துவம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறித்தும், கல்வி மற்றும் சமூக நலன் குறித்தும், திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்தும், விவசாயம், விவசாயம் சார்ந்த சேவைகள் குறித்தும், பொருளாதார வளர்ச்சிகள் குறித்தும் மற்றும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது என்று தெரிவித்தார். கூட்டத்தில், சப்-கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments