புதுக்கோட்டை, அன்னவாசல், அறந்தாங்கியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் வேளாண்மை துறை வேலையை கிராம நிர்வாக அலுவலர்களிடம் திணிக்கக்கூடாது, டிஜிட்டல் கிராப் சர்வே பணியை கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்க கூடாது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களை தனித்தனியாக பிரிக்க வேண்டும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இலுப்பூர்
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பாண்டியன், மாவட்ட துணை தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட செயலாளர் ஞானசேகரன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 2023-24 ரவி பருவத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளுக்கு அரசு ஒதுக்கியுள்ள நிதியானது கடந்த ஜனவரி 8-ந்தேதி நடைபெற்ற நிர்வாக வருவாய் ஆணையர் தலைமையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டிற்கு எதிராக உள்ளது என்பது உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் சார்பில் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.