ஆவுடையார்கோவில் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்




ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் சாலையில் அரசு டாஸ்மாக் கடை கடந்த 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்புறம் புதிதாக டாஸ்மாக் கடை கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. கடை திறக்கும் முன்பு 15 ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த டாஸ்மாக் பார் உரிமையாளரின் உறவினர்கள் மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சேர்ந்து எங்கள் பகுதிக்கு டாஸ்மாக் கடை தேவையில்லை. எனவே புதிய கட்டிடத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகம் தான் பதிலளிக்க வேண்டும். அதனால் அவர்களிடம் புகார் மனு கொடுங்கள் என்று கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments