கோபாலப்பட்டிணத்தில் TNTJ புதுக்கோட்டை மாவட்ட ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு தெருமுனைக் கூட்டம்!



கோபாலப்பட்டிணத்தில்  TNTJ, புதுக்கோட்டை மாவட்ட, ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை), 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு, தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக, TNTJ, புதுக்கோட்டை மாவட்ட, ஏகத்துவ எழுச்சி மாநாடு மற்றும் அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை), 10 மாதகால செயல்திட்டத்தை முன்னிட்டு, 29.09.2024 ஞாயிற்றுக்கிழமை,  மாலை 7 மணியளவில், தவ்ஹீத் பள்ளிவாசல் முன்பு, மார்க்க விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு, மாவட்டத் தலைவர், H.சித்திக் ரகுமான்.,B.E., அவர்கள் தலைமை வகித்தார்கள்.

மேலும், மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் N.உஸ்மான் அலி, கிளைப் பொறுப்பாளர்கள் சையது இப்ராஹிம், மீரான் சேக்காதி, சேக் அலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநிலச் செயலாளர் இ.ஜே. அப்துல் முஹ்சின் அவர்கள், அழகிய முன்மாதிரி இப்ராஹீம் (அலை) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா

1.வக்ஃப் வாரிய சட்டத்தில் 44 திருத்தங்களை செய்வதற்கு ஒன்றிய மைனாரிட்டி பாஜக அரசு முயற்சிக்கிறது,  வக்ஃப் வாரியத்தை முழுமையாக செயலிழக்க செய்து இஸ்லாமியர்களின் சொத்துக்களை அபகரிக்கும் பணியை   இம்மசோதாவின் மூலம் அரங்கேற்ற நினைக்கும் ஒன்றிய மைனாரிடிட்டி பாஜக அரசை இந்த தெருமுனை கூட்டம்  வாயிலாக வன்மையாக கண்டிக்கின்றோம். இதற்காக அமைக்கப்பட்டுள்ளா கூட்டு பாராளுமன்றக் குழுவின் பரிந்துரைகள் இஸ்லாமியர்களின்
சொத்துக்களையும்  பாதுகாக்கும் வகையில் அமைய வேண்டும் என இந்த தெருமுனை கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 

அழகிய முன்மாதிரி இப்ராஹிம் (அலை)

2.திருமறைக்குர் ஆனில்  மனித குலத்திற்கு அழகிய முன்மாதிரி என்று கூறப்பட்டுள்ள நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் வரலாற்றையும் , வாழ்க்கை செய்தியையும் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக 10 மாத கால தொடர்பிரச்சாரத்தை மிகச் சிறப்பாக இறைவனின் அருளால் செய்வோம் என இந்த தெருமுனை கூட்டம் வாயிலாக உறுதி ஏற்கிறோம். 

ஒன்றிய அரசின் பாராமுகம்

3.தமிழக ரெயில்வே திட்டங்களுக்கும், கல்வித்துறையின் திட்டங்களுக்கும் போதிய நிதியை வழங்காமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசின்நடவடிக்கைககளை  இந்த தெருமுனை கூட்டம்  வாயிலாக கண்டிக்கிறோம்

போதை ஒழிப்பு உடனடி தேவை

4.இந்தியா முழுவதும் நடமாடும் போதைப்பொருட்களையும், பல குடும்பங்களை சீரழித்துக்கொண்டிருக்கும் மதுவையும் நிரந்தரமாக தடை செய்ய தேசிய கொள்கையை  அரசியலமைப்புப்பிரிவு 47ன் படி ஒன்றிய அரசு கொண்டுவர வேண்டும் என இந்த தெருமுனை கூட்டம்  வாயிலாக கேட்டுக்கொள்கிறோம். 

இடஒதுக்கீட்டை அதிகரியுங்கள்

5.தமிழகத்தில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள 3.5 இட ஒதுக்கீட்டின் மூலம் கல்வி, வேலைவாய்ப்பு 
உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் மேலும் சாதிவாரிக்கணக்கெடுப்பை எடுத்து இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக அரசை இந்த இந்த தெருமுனை கூட்டம்  வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments