மீமிசல், பாலக்குடி கீழக்குடியிருப்பு மீனவ கிராமங்களில் மீனவா் நலத்திட்ட அலுவலா் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு.





புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 3 மீனவ கிராமங்களில் மீனவ மக்களிடையே அரசின் நலத் திட்டங்கள் குறித்து விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தும் சாகா் மித்ரா பதவிகளுக்கு தகுதியுள்ளோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அழைப்புவிடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

 புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 32 மீனவ கிராமங்களில், கீழக்குடியிருப்பு, மீமிசல், பாலக்குடி ஆகிய 3 மீனவ கிராமங்களில் மட்டும் இதுவரை சாகா் மித்ரா பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.

மீனவ கிராமப் பகுதியைச் சோ்ந்த 35 வயதுக்குள்பட்ட, குறைந்தது பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற நபா்கள் இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம். மாதந்தோறும் ரூ. 15 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்கு தகுதியுள்ள நபா்கள் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை வரும் அக். 7-ஆம் தேதிக்குள் தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments