குப்பைக்கான நிரந்தர தீர்வு காண GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக ஜமாத்தார்களிடம் மனு கொடுக்கப்பட்டது.




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணத்தில் பல நாட்களாக குப்பைகள் மலைப்போல் தேங்கி கிடக்கின்றது. சாலைகளை குப்பைகள் ஆக்கிரமித்துள்ளது.அது சம்பந்தமாக GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை சார்பாக ஜமாத் நிர்வாகிகளிடம் இன்று 19.09.2024 கடிதம் கொடுக்கப்பட்டது. அந்த கடிதம் இன்ஷா அல்லாஹ் நாளை 20.09.2024 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு வாசிக்கப்படுகிறது. ஊரில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் நமது ஊர் தூய்மை பெற நாம் செய்ய வேண்டியது நாளை நடைப்பெறும் கூட்டத்தில் கலந்து கொண்டு நமது ஊரை குப்பையில்லா ஊராக மாற்ற நாம் அனைவரும் ஒன்றினைந்து குப்பை கொட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்வோம்.


GPM சொந்தங்கள் சமூக அறக்கட்டளை
கோபாலப்பட்டிணம்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments