கோபாலப்பட்டிணம் :பொதுமக்களுக்கு ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பு




கோபாலப்பட்டிணம் :பொதுமக்களுக்கு  ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில்பொதுமக்களுக்கு  ஜமாஅத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது 

அந்த அறிக்கையில் 

‌ கடிதம் சம்பந்தப்பட்ட விதிமுறைகள்

கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத்தை சேர்ந்த நமது ஊர் பொதுமக்கள் தங்களின் சொந்த பிரச்சினையின் காரணமாக நமது ஊர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் கடிதம் கொடுத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்பது என்பது நமது ஊர் மரபு ஆகும். இதை நமது ஊர் பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே.

அவ்வாறு கொடுக்கப்படும் கடிதங்கள் சம்மந்தமான விதிமுறைகள்:

1) மனுதாரரின் தொடர்பு எண், முகவரி உட்பட முழு விபரம் தெளிவாக இருக்க வேண்டும்.

2) எதிர்மனுதாரரின் தொடர்பு எண், முகவரி உட்பட முழு விபரம் தெளிவாக இருக்க வேண்டும்.

3) வெளியூர் ஜமாஅத் சம்பந்தமான கடிதமாக இருந்தால் அந்த ஜமாஅத்தின் தற்போதைய நிர்வாகிகளின் தொடர்பு எண்கள் கட்டாயம் இருக்க வேண்டும்.

4) தனிப்பட்ட பிரச்சினையில் புகாருக்கு நேரடியாக சம்பந்தபட்டவர்கள் மட்டுமே கடிதத்தின் மனுதாரராக இருக்க வேண்டும்.

5) கடிதத்தின் மனுதாரரின் சந்தா தொகை நிலுவையில் இருக்கக்கூடாது. சந்தா முழுமையாக கட்டியிருக்க வேண்டும்.

6) மேற்படி அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் கடிதத்திற்கான நுழைவுக்கட்டணம் ரூ. 100/ (நூரு ருபாய்) பெற்றுக்கொண்டு அதற்கான ரசீதும் கொடுக்கப்படும். பிறகு விரைவில் விசாரனை

தொடங்கும்.

 பெண்கள் மதரஸாவின் நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அறிவிப்பு

அறிவிப்பு

கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் நமது ஊரின் பெண்கள் மதரஸாவில் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்கள் என்பதை நமது ஊர் பொதுமக்கள் யாவரும் அறிந்ததே. பெண்கள் மதரஸாவின் பெண் நிர்வாகிகள் பெண்கள் மதரஸா சம்பந்தமாக ஏதேனும் ஆலோசனைகள் கூறினால் அதை ஊர் நலன் கருதி மதிப்பு கொடுத்து ஏற்றுக்கொள்ள வேண்டும். பொது வெளியில் விமர்சனம் செய்வது, புரணி பேசுவது என்பதை தவிர்த்து கொள்ள வேண்டுமென கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ஏதேனும் குறைகள் இருந்தால் ஜமாஅத் நிர்வாகிகளிடம் தபால் மூலமாகவோ அல்லது ஜமாஅத் அலுவகத்தில் வந்து நேரிலோ குறைகளை சொல்லலாம். மேலும் பெண்கள் மதரஸா நிர்வாகிகளை பொதுவெளியில் விமர்சனம் செய்வது என்பது ஜமாஅத் நிர்வாகிகளை அவமதிக்கும் செயல் ஆகும்.

 குடிமகன் நசார் சம்பந்தப்பட்ட அறிவிப்பு

கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத் நிர்வாகிகள் நம ஊரின் பொதுமக்களுக்கு ஏதேனும் அழைப்பு ஆணை, பொது அறிவிப்பு போன்றவற்றை நமது ஊர் குடிமகன் நசார் மூலமாக தகவல் தெரிவிக்கும் பணியை சொல்வது என்பது நமது ஊரின் மரபு ஆகும். அவ்வாறு சம்மந்தப்பட்ட நபரிடம் குடிமகன் தகவல் சொல்லும்போது குடிமகன் நசார் அவர்களிடம் வாக்குவாதம் செய்வது, அநாகரீகமாக திட்டுவது, விளக்கம் சொல்லுதல் என்ற பெயரில் விவாதம் செய்வது ஆகியவற்றை கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தை சார்ந்த பொதுமக்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டுமென கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். மேலும் மேற்படி விசயங்களில் குடிமகன் நசாரிடம் வாக்குவாதம் செய்வது என்பது ஜமாஅத் நிர்வாகிகளை அவமதிக்கும் செயல் ஆகும்.

‌ அழைப்பு ஆணை (சம்மன்) சம்பந்தப்பட்ட அறிவிப்பு

கோபாலப்பட்டிணம் முஸ்லீம் ஜமாஅத்தை சேர்ந்த நமது ஊர் பொதுமக்கள் தங்களின் சொந்த பிரச்சினையின் காரணமாக நமது ஊர் ஜமாஅத் நிர்வாகிகளிடம் கடிதம் கொடுத்து தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கேட்பது என்பது நமது ஊர் மரபு ஆகும். இதை நமது ஊர் பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே.

அவ்வாறு கொடுக்கப்படும் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் எதிர்மனுதாரரை ஜமாத் நிர்வாகிகள் குடிமகன் நசார் மூலம் அழைப்பு ஆணை சொல்லிவிடுவது நமது ஊர் மரபு ஆகும். இதை நமது ஊர் பொதுமக்கள் அனைவரும் அறிந்ததே.

எதிர்மனுதாரருக்கு ஏதேனும் சூழ்நிலையின் காரணமாக ஆஜர் ஆக முடியாமல் இருந்தால் 3 கெடு வாய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும். அதிகபட்டமாக 3 முறை 3 கெடு வய்ப்புகள் மட்டுமே கொடுக்கப்படும். தவறும் பட்சத்தில் கோபாலபட்டிணம் ஜமாஅத் நிர்வாகம் மேற்படி எதிர்மனுதாருக்கு ஒத்துழைப்பு கொடுக்காது என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...






Post a Comment

0 Comments