சென்னை - ஜித்தா நாளை 02-10-2024 முதல் வாரம் இருமுறை நேரடி விமானம் சேவை இயக்கம் - சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு..




சென்னை - ஜித்தா நாளை 02-10-2024 முதல் வாரம் இருமுறை நேரடி விமானம் சேவை இயக்கம் - சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது 
அக்டோபர் 2 ஆம் தேதி முதல் சென்னை - ஜித்தா தளத்தில் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் வாரம் இரண்டு முறை நேரடி விமானங்களை இயக்குகிறது. திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் இந்த நேரடி விமானம் செயல்படும். தமிழ்நாட்டு பயணிகளுக்கு இந்த விமான சேவை மிகுந்த பயனுள்ளதாக அமையும்.

ஜித்தா விமான நிலையத்தில் இருந்து(சவூதி நேரம் )காலை 9 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 5:10க்கு சென்னை விமான நிலையத்தை வந்தடையும். பின்னர், சென்னையில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் இந்த விமானம் இரவு 11:15 க்கு ஜித்தா விமான நிலையம் வந்து சேரும். முன்னதாக வாரம் மூன்று முறை சென்னை - ஜித்தா விமானம் இயக்கப்படும் என கூறி இருந்த நிலையில் தற்போது இரண்டு முறை என உறுதிபடுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments