வழக்கில் சிக்கிய காரைவிடுவிக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
சிவகஙகை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த அழகாபுரி பகுதியை சேர்ந்தவர், அன்பு மலை கண்ணன் என்ற சாதுமங்கலம் சாமி. இவரது கார் ஒன்று 2010-ம் ஆண்டு காளையார்கோவில் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கு தொடர்பாக நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து, காளையார் கோவில் போலீஸ் நிலையத்தில் அப்போதைய இன்ஸ் பெக்டராக இருந்த செங்குட்டுவனை சந்தித்து தன்னுடைய காரை விடுவிக்கும்படி அன்பு மலைகண்ணன் கேட்டுள்ளார்.
அதற்கு இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காரை விடுவிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
6 ஆண்டு சிறை
லஞ்சம் கொடுக்க விரும்பாத அன்பு மலைகண்ணன், இதுகுறித்து சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை 2010-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி, இன்ஸ்பெக்–டர் செங்குட்டுவனை சந்தித்து அன்பு மலைகண்ணன் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து நின்றிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனை கையும், களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பாக சிவகங்–கை–யில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுரேஷ்குமார் ஆஜரானார். வழக்கை நீதீபதி செந்தில்முரளி விசாரணை செய்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.