அறந்தாங்கி அருகே மீமிசலில் மீனவ பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. சுடர் மீனவ கூட்டமைப்பை சேர்ந்த சுசிலா தலைமை தாங்கி பேசுகையில், மாவட்டத்தில் உள்ள தொலைநோக்கு சமூக சேவை சங்கம் 10 ஒன்றியங்களில் செயல்பட்டு வருகிறது. மீமிசல் சுடர் மீனவப் பெண்கள் கூட்டமைப்பு, மணமேல்குடி விடியல் பெண்கள் கூட்டமைப்பு இணைந்து ஒருங்கிணைப்பு விழா நடத்தியது. இந்த சேவை சங்கம் முழு மனித முன்னேற்ற நோக்கத்தோடு பெண்கள் சமூகம் பொருளாதாரம், கலாசாரம், வாழ்வாதாரம், அரசியல் போன்ற அமைப்புகளில் மேம்பாடு அடைவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான முதல் முயற்சியாக கிராமங்கள் தோறும் சுய உதவி குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு அக்குழுக்களை சுய சார்பு அடைய செய்ய சேமிப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு பயிற்சி கொடுக்கப்பட்டு 12 முதல் 20 உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள் தற்போது நூற்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் சுயதொழில் தொடங்கியும் பல்வேறு காலகட்டங்களில் சமூக சேவை செய்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது என்றார். விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மீமிசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி கலந்து கொண்டார். இதில் பள்ளி மாணவிகள் பரதநாட்டியம், குழு பற்றிய பாடல்களும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.