மணமேல்குடி ஒன்றியத்தில் கலைத்திருவிழா முன் திட்டமிடல் கூட்டம்




மணமேல்குடி ஒன்றியத்தில் கலைத்திருவிழா முன் திட்டமிடல் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு சண்முகம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்தில் கலைத்திருவிழா முன் திட்டமிடல் கூட்டம் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர் மதிப்பிற்குரிய திரு செழியன் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் அவர்கள் முன்னிலை வகித்தார்.இந்நிகழ்வில்  அனைவரையும் வரவேற்று  சென்ற வருட சிறப்பையும் இந்த வருட முன்னாயத்தமும் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் கலைத் திருவிழா சார்ந்து கருத்துரை, இந்த வருட கலைத்திருவிழா அமைவு மற்றும் குழு சார்ந்தும், விழா சார்ந்த ஒவ்வொரு குழுவின் செயல்பாடு குறித்தும்  நிகழ்விடம் சார்ந்த முன்னேற்பாடுகள் குறித்தும்  மாணவர்கள் பாதுகாப்பும் பங்கேற்பும் குறித்தும் எல்லோருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும்,

பயிற்சி மற்றும் மாணவர்கள் கல்வி நலன் பாதிக்காத வண்ணம் செயல்படுத்துதல் வேண்டும் என்றும்  போட்டி மாணவர்கள் பெயர்களைத் தவிர்த்து எண் வழங்குதல் வேண்டும் என்றும்  கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிகழ்வில்  அனைத்து நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள்  தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.











எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments