சமூகவலைத்தளத்தில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி கணக்கு நண்பராக கோரி அவருக்கே பதிவு வந்த ருசிகரம்




சமூகவலைத்தளத்தில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெயரில் போலி கணக்கு தொடங்கப்பட்டு, நண்பராக அனுமதி கோரி அவருக்கே பதிவு வந்தது ருசிகரத்தை ஏற்படுத்தியது.

போலி கணக்குகள்

சமூகவலைத்தளத்தில் போலியான கணக்குகளை தொடங்கி, அதில் இருந்து பண உதவி, பொருள் உதவி கேட்டு நூதன மோசடியில் ஈடுபடும் கும்பலின் கைவரிசை அரங்கேறி தான் கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் முதல் அதிகாரிகள், போலீசார், பிரபலங்கள் பெயரில் அவர்களது புகைப்படத்துடன் போலியான கணக்கை தொடங்கி, பிறருக்கு நண்பராக அனுமதிக்கு பகிர்ந்து, அதன் மூலம் மோசடியில் மர்மநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணாவின் பெயரில், அவரது புகைப்படத்துடன் வாட்ஸ்-அப், முகநூலில் போலியான கணக்கு தொடங்கியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் கலெக்டர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு அந்த கணக்கு முடக்கப்பட்டது. இருப்பினும் அவரது புகைப்படம், பெயருடன் மற்றொரு போலியான கணக்கு இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டர்

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட உளவுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கை மர்மநபர்கள் தொடங்கியுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே ஐ.டி பயன்படுத்தி வருகிற அவருக்கே நண்பராக அனுமதி கோரி, அவரது பெயரில், புகைப்படத்துடன் பதிவு வந்திருந்தது. இது அவருக்கு பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இதனை மர்மநபர்கள் தொடங்கியிருப்பதை அவர் அறிந்தார். அவா் பார்வையிட்ட நேரத்தில், அந்த போலி கணக்கில் நண்பராக 114 பேர் அவரை பின்தொடர்ந்தனர். மேலும் 214 பேர் கணக்கை போலி கணக்கை தொடங்கியவர் பின்தொடர்வதாக இருந்தது. இதனால் சுதாரித்துக்கொண்ட இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் உடனடியாக தனது நட்பு வட்டத்தில் உள்ளவர்களுக்கு தனது பெயரிலான போலி கணக்கு குறித்து தகவல் தெரிவித்து முகநூலிலும், இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டார்.

ருசிகரம்

அந்த போலியான கணக்கில் இருந்து நண்பராக அனுமதி கோரியும், வேறு எந்த உதவியும் கேட்டு குறுஞ்செய்தி வந்தால் பதில் அளிக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். மேலும் அந்த போலி கணக்கை முடக்கவும் இன்ஸ்டாகிராம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் பெயரில் போலி கணக்கை தொடங்கி, அவருக்கே நண்பராக மர்மநபர் வலையை விரித்தது அவரை சார்ந்தவர்கள் மத்தியில் ருசிகரத்தை ஏற்படுத்தியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments