கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் பரவலாக மழை




 கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில்  பரவலாக பருவ மழை பெய்து வருகிறது 
 
வங்கக்கடலில் கடந்த 14-ந்தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த 16-ம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பெரும்பாலன இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மெல்ல மெல்ல மழைநீர் வடிந்ததால் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்நிலையில் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது..

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலப்பட்டிணம் மீமிசல் பகுதியில் கடந்த சில நாட்களாக  கருமேகங்கள் சூழ்ந்து வெப்பம் தணிந்து பலத்த மழை பெய்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.

பலத்த மழையால் ஒரு சில இடங்களில் தாழ்வான பகுதியில்   தண்ணீர் தேங்கியுள்ளது

தற்போது பெய்த  மழையினால்  பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments