GPM மக்கள் மேடையின் சார்பாக அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டம் எடுத்து கொடுக்க முகாம்




GPM மக்கள் மேடையின் சார்பாக அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டம் எடுத்து கொடுக்க முகாம் நடைபெற்றது 
GPM மக்கள் மேடையின் சார்பாக கோபாலப்பட்டினம்  ஊரிலுள்ள அனைத்து மக்களுக்கும் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு அட்டை எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இரு கட்டங்களாக அறிவிக்கபட்டு இருந்தது 

அதற்கான பணிகளை  செய்துவந்த நிலையில் மீண்டும் துரிதபடுத்தி இந்த மாதத்திற்குள் நமது ஊரிலுள்ள அனைத்து மக்களும் பயன் பெறும் நன் நோக்கத்தில்  12-10-2024 முதல் GPM பொது நலசேவை  மையம் நடத்திவரும் முகம்மது யூசுப் மற்றும் ஹாஷியா இ-சேவை மையம் நடத்திவரும் அப்துல் ரசாக் ஆகிய இரண்டு இடங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது . பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதல் அமைச்சரின் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை விண்ணப்பித்தனர்.

விண்ணபித்தவர்களுக்கு கோபாலப்பட்டினம் தங்கமஹால் திருமன மண்டபத்தில் அரசு அதிகாரிகளை கொண்டு புகைப்படம் எடுத்து முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் பெற்று கொடுக்கும் நிகழ்வு கடந்த இரு நாட்களாக(23-10-2024 மற்றும் 24-10-2024) நடைபெற்றது 

இந்த சிறப்பு முகாமில்   366 நபர்கள் புகைப்படம் எடுத்து முதல் அமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் விண்ணபங்கள் முழுமையாக பெற்று கொடுக்கபட்டுள்ளது இந்த முகாமில் புகைப்படம் எடுத்த நபர்கள் விண்ணப்பம் அளித்த இடத்தில் முதல் அமைச்சரின் காப்பீடு திட்டத்தின் என்னை பெற்று கொள்ளாலாம்

இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க தவறியவர்கள் GPM பொது நல சேவை  மையம் நடத்திவரும் முகம்மது யூசுப் மற்றும் ஹாஷியா இ-சேவை மையம் நடத்திவரும் அப்துல் ரசாக் ஆகிய இரண்டு இடங்களில் விண்ணப்பிக்குமாறும் பின்னர் ஒரு நாளில் புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் GPM மக்கள் மேடை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது .


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments