![]() |
மீமிசல் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இறால் பண்ணை உரிமையாளர்களை படத்தில் காணலாம். |
மின் இணைப்பு துண்டித்ததை கண்டித்து இறால் பண்ணை உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின் இணைப்பு துண்டிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே வெளிவயல் கிழக்குக் கடற்கரை சாலையில் தனியாருக்கு சொந்தமான இறால் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. சொந்த பட்டா இடங்களில் அமைந்திருக்கும் இந்த இறால் பண்ணைகளுக்கு அருகில் உள்ள புறம்போக்கு இடத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு பெற்று பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இது சம்பந்தமாக சில நபர்கள் நீதிமன்றத்தில் புறம்போக்கு நிலத்தில் உள்ள மின்மாற்றியில் இருந்து இறால் பண்ணைகளுக்கு மின்சாரம் வழங்கக் கூடாது என்று வழக்கு தொடர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அங்கு வந்த மின்வாரிய துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் நீதிமன்ற உத்தரவு எனக் கூறி இறால் பண்ணைகளில் உள்ள மின் இணைப்புகளை துண்டித்துள்ளனர்.
மறியல் போராட்டம்
அப்போது இறால் பண்ணை உரிமையாளர்கள் தங்கள் பண்ணைகளில் இறால் குஞ்சுகள் விடப்பட்டு தற்பொழுது அதனை விற்பனை செய்யும் நிலையில் உள்ளது. எனவே இறால் குஞ்சுகளை விற்பனைக்கு கொடுத்த பிறகு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இறால் பண்ணை உரிமையாளர்களின் கோரிக்கையை நிராகரித்த அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்கும் வேலையில் இறங்கினர். இதனால் ஆத்திரமடைந்த இறால் பண்ணை உரிமையாளர்கள் ராமநாதபுரம்- நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மீமிசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட இறால் பண்ணை உரிமையாளர்களிடம் ேபாலீசார், அதிகாரிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் பண்ணை உரிமையாளர்கள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை ைகவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ராமநாதபுரம்- நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.