மணமேல்குடி அருகே குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி கலெக்டர் ஆய்வு




மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது. இதனை வெளியேற்றும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் அருணா நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெய்த மழையின் காரணமாக குடியிருப்புகளில் மழைநீர் தேங்காத வண்ணம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு கலெக்டர் அருணா அறிவுறுத்தினார். அதனைதொடர்ந்து அறந்தாங்கி அருகே எட்டியதளி கிராமத்தில், சொட்டுநீர் பாசனம் அமைத்து பயனடைந்த விவசாயியின் தோட்டத்தினையும் அவர் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது அதிகாரிகள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments